Tuesday, February 2, 2010

மகளிருக்கான இணையதளம்: யாகூ அறிமுகம்

மகளிரை கவரும் வகையில் அவர்களுக்கு தேவையான அம்சங்களை உள்ளடக்கிய, ஷைன் (Shine) என்ற புதிய இணையதளத்தை யாகூ நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

[goofy-yahoo-logo.gif]
நியூயார்க்கில் நடந்த அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய யாகூ லைப் ஸ்டைல் பிரிவின் துணைத்தலைவர் அமி லோரியோ, 'ஷைன்' இணையதளம், 25 முதல் 54 வயது பெண்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.ஆடையலங்காரம், அழகுக்குறிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், குழந்தை வளர்ப்பு, காதல் டிப்ஸ், சிக்கன வழிமுறைகள், உணவு தயாரிப்பு, வீட்டு பராமரிப்பு, ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகளிருக்கு தேவையான ஆலோசனைகளை ஷைன் இணையதளம் வழங்கும் என யாகூ கூறியுள்ளது.இந்த இணையதளத்திற்கு தேவையான தகவல்கள், கட்டுரைகளை பெற, ஹீயார்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரோடேல் ஆகிய நிறுவனங்களுடன் யாகூ கூட்டு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment