Wednesday, February 3, 2010

System32.Corrupted

இவர் System என்று எங்கள் அறையில் செல்லமாக அழைக்க படுவார். இவர் text ஓட்டுவதில் மன்னன். இப்போதைக்கு Mic-கு வருவதாக idea இல்லை என்கிறார். இவர் strange id-யில் யாரவது வந்தால் முதிலில் HI போடுவது இவராகத்தான் இருக்கும். மேல் விவரங்களுக்கு, PM பண்ணவும். அது பெண்களாக இருந்தால் மகிழ்ச்சி.

Tuesday, February 2, 2010

பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்


நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.


இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.

எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.comஇதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள்

மகளிருக்கான இணையதளம்: யாகூ அறிமுகம்

மகளிரை கவரும் வகையில் அவர்களுக்கு தேவையான அம்சங்களை உள்ளடக்கிய, ஷைன் (Shine) என்ற புதிய இணையதளத்தை யாகூ நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

[goofy-yahoo-logo.gif]
நியூயார்க்கில் நடந்த அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய யாகூ லைப் ஸ்டைல் பிரிவின் துணைத்தலைவர் அமி லோரியோ, 'ஷைன்' இணையதளம், 25 முதல் 54 வயது பெண்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.ஆடையலங்காரம், அழகுக்குறிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், குழந்தை வளர்ப்பு, காதல் டிப்ஸ், சிக்கன வழிமுறைகள், உணவு தயாரிப்பு, வீட்டு பராமரிப்பு, ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகளிருக்கு தேவையான ஆலோசனைகளை ஷைன் இணையதளம் வழங்கும் என யாகூ கூறியுள்ளது.இந்த இணையதளத்திற்கு தேவையான தகவல்கள், கட்டுரைகளை பெற, ஹீயார்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரோடேல் ஆகிய நிறுவனங்களுடன் யாகூ கூட்டு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை

தற்போது ஆன்லைன் நேயர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு யூ டியூப் உள்ளிட்ட பல இணையதளங்களிலிருந்து வீடியோ கிளிப்பிங்குகளை டவுன்லோடு செய்வதுதான். இதனால் கணினிகளின் பாதுகாப்பிற்கு பல ஆபத்துகள் நேர்வதாக கணினி பாதுகாப்பு ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.



யூ டியூப் மற்றும் பிற நட்புறவு இணையதளங்களில் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிப்பது மற்றும் டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவது என்பது ஆன்லைன் நேயர்களிடையே தற்போது பிரபலமடைந்து வரும் பழக்க வழக்கம். உரை ரீதியிலான பொருளடக்கங்களை விட வீடியோ கிளிப்பிங்குகளை பார்ப்பது, டவுன்லோடு செய்வது, அவற்றை பல நண்பர்களுக்கு அனுப்புவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது.

ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது வைரஸ் கிருமி சமிக்ஞை உள்ள குறியீடையும் நாம் சேர்த்தே டவுன்லோடு செய்து விடுகிறோம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. இந்த வைரஸ் சமிக்ஞை உங்கள் கணிகளை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் நிதி நிலைமை, வங்கிக் கணக்கு, உங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அப்படியே திருடிச் செல்கிறது.

ஜியார்ஜியா தொழில்நுட்ப தகவல் நிறுவனம் இது குறித்து கூறுகையில், தற்போதைய வெப் 2.0 தொழில்நுட்பம் பல்வேறு வகையான டவுன் லோடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனாளர் அனுபவம் விரிவடைகிறது எனினும் திருட்டு சமிக்ஞைகளையும் சேர்த்தே நாம் டவுன்லோடு செய்வதும் நடக்கிறது என்று எச்சரித்துள்ளது.

ஃபிளாஷ் மீடியா ஃபைல் ஃபார்மேட்டுகள் அதிக பிரபலமடைந்து வரும் இக்காலக் கட்டங்களில், ஒரு மீடியா ஃபைலை டவுன்லோடு செய்யும்போதே ஹேக்கர்களிடம் கணினிகளை ஒப்படைப்பதும் நடைபெறுகிறது.

இணைய தள பயனாளர்களின் தினசரி ஆன்லைன் நடவடிக்கைகளில் மோசடி நிபுணர்களின் போலி இணைப்புகளும் நுழைந்து கொண்டிருக்கிறது. யூ டியூப் வீடியோ ஒன்றில் அல்லது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஸ்ட்ரிங்கின் முடிவில், எக்செல் ஸ்ப்ரெட் ஷீட்டில் என்று ஹேக்கர்கள் மோசடி இணைப்புகளை வைத்திருப்பார்கள் என்று செக்யூர் கம்ப்யூடிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி

Sunday, January 31, 2010

உண்மையான வெற்றி.......

வெற்றியை விரும்பும் நமக்கு

தோல்வியை தாங்கும் மனம் இல்லை…!

தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்

ஒரு வெற்றிதான் .!

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்.

Thursday, January 28, 2010

நட்பு

நட்பு ஜாதி அரியது: எவர் தாகத்தையும் அது தீர்க்கும்,
நட்பு அழியாதது : தலைமுறை தலைமுறையாக தொடரும்,
நட்பு தியாகத்தின் உருவம்: உண்மையான நட்புக்கு உயிர் கொடுக்கும்,

பிரியும் பொது புரியும்....

என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை விட்டு பிரியும் போது...